நீ வெளிச்சத்தில் சென்றால் உலகமே உன்னைப் பின்தொடரும். ஆனால் நீ இருட்டினில் சென்றால் உன் நிழல் கூட உன்னைப் பின்தொடராது. - ஹிட்லர்
" சுப்பிரமணியத்தின் பேச்சைப் புரிந்துகொள்வது எப்படி?"
         இந்திய மலேசியர்களின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு மைய அரசு அறிவித்திருக்கும் திட்டங்கள் தெளிவாக விளங்குகின்றன. இத்திட்டங்கள் குறித்து மலேசிய இந்தியர் காங்கிரசின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான டாக்டர் எஸ். சுப்பிரமணியம் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

         மலேசியாகினி (Malaysiakini) இணைய இதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது. அரசின் திட்டங்களை அவர் வரவேற்கிறார் என்பது விளங்குகிறது. அது மட்டும்தான் விளங்குகிறது. வேறொன்றும் விளங்கவில்லை. எத்தனை முறை படித்துப் பார்த்தாலும் விளங்கிக்கொள்ள முடியவில்லை.

         யாருக்கும் ஏதும் விளங்கிவிடாதபடி பேசும் திறன் உடையவர் அவர் என்று தெரிகிறது; வாழ்த்துகள்.
         ம.இ.கா. தலைமையகம் கையேடு ஒன்றை வெளியிடுவது நல்லது.
கையேட்டின் தலைப்பு:
`சுப்பிரமணியத்தின் பேச்சைப் புரிந்துகொள்வது எப்படி?’

கமல் ராஜன்