இன்றைய கவிதை
"நம்பிக்கை "
அனுபவித்த வேதனையால்
ஆட்டிபடைத்த சோதனையால்
அவபெயரிட்ட அன்பு உள்ளங்களால் - வந்தது
எனக்கு நம்பிக்கை........
நம்பியவர்கள் கைவிட
எதையும் எதிர்பார்க்காத - அன்பு
உள்ளங்கள் கைகொடுக்க - வந்தது
எனக்கு தன்னம்பிக்கை ........
கடல் அலைகளாய் வந்த வேதனைகள்
சுனாமி அலைகளாய் வந்த சோதனைகள்
சுடர் விட்டு எரியும் என் - தன்னம்பிக்கையால்
ஆவியாய் போகும் நாட்கள் மிக விரைவில் .....
மு.முத்துக்குமார்