ஜனனி : அம்மா, மூச்சுவிடாம நாம இருக்க முடியுமா?
அக்கா : இல்ல பாப்பா. மூச்சு விட்டாதான் நாம உயிரோட இருக்க முடியும். எதுக்கு கேட்கற?
ஜனனி : எங்க மிஸ் எப்ப பாத்தாலும் ‘யாரும் மூச்சு விடக்கூடாது’, ‘யாரும் மூச்சு விடக்கூடாது’ ன்னே சொல்றாங்கம்மா..
அக்கா : யாரும் பேசக்கூடாதுங்கறத தான் அப்படி சொல்றாங்க. மிஸ் சொல்றாங்கன்னு நீ மூச்சு விடாம இருந்துடாத பாப்பா!
ஜனனி : ‘மாமா, அம்மாவ விட்டுட்டு நான் மட்டும் தனியா கரூர்ல அம்மாச்சி வீட்டுக்கு போனேனே’
நான் : ‘அப்பறம் ஏன் அம்மாகிட்டப் போறேன்னு அடுத்த நாளே திருப்பூர் ஓடிட்ட?’
ஜனனி : ‘நான் தூங்கும்போது அம்மா காத பிடிச்சுட்டு தான தூங்குவேன்? கரூர்ல அம்மாச்சி காதுதான் இருந்தது. அதான் திருப்பூர் போயிட்டேன்’
கண் டாக்டர் : அந்த போர்டில் உள்ள எழுத்துக்களை படிங்க!
நோயாளி : போர்டு எங்க டாக்டர் இருக்கு?
சோ, லல்லு பிரசாத் யாதவ், சுப்ரமணிய சாமி இவர்களை வீரப்பன் கொண்டு போனால் யார் காப்பற்றபடுவார்கள்?
இந்த நாடு காப்பாற்றப்படும்.
ஸ்பின் பெளலருக்கு பெண் குழந்தை பிறந்தால் என்ன பெயர் வைப்பார்?
பால திருப்புற சுந்தரி
கடவுள் காளிக்கும் குத்துச் சண்டைக்கும் என்ன ஒற்றுமை?
நாக் அவுட்
எல்.ஐ.ஸி மாடியிலிருந்து லட்டைப் போட்டால் என்னவாகும்?
பூந்தியாகும்.
ஊர் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளையை கொடைக்கானலா வளர்க்கும்?
பிரசவ ஆஸ்பத்திரிக்கு எப்படி போகணும் ?
கர்ப்பமா போவணும்
கேள்வி : உலகத்திலேயே பெரிய மிருகம் எது ?
பதில் : யானை
கேள்வி :அதை விட பெரிய மிருகம்?
பதில் : இன்னொரு யானை