| ஒரு விவசாயி கிணறு வெட்டுவதற்காக லோன் வாங்குவதற்கு பக்கத்து
டவுனில் உள்ள வங்கிக்கு நடையாய் நடக்கும் கதை.
இடத்து பத்திரம் கொண்டு வா, கணக்கபிள்ளையிடம் சர்டிபிகேட் வாங்கிவா,
ரேஷன் கார்டு கொண்டுவா, போட்டோ கொண்டுவா என்று பலமுறை நடக்க
விட்டு கடைசியில் கமிஷன் கொடுத்தால்தான் லோன் சாங்க்ஷன் ஆகும்
என்று சொல்லி 5000 கடனுக்கு 2000 கமிஷன் வாங்கி விடுகிறான். ஆனால்
அவன் செய்த ஒரே தவறு களபரிசோதனை
செய்யாமலேயே,பரிசோதனை செய்ததாக கையெழுத்து போட்டு கடன்
பட்டுவாடா செய்து விடுகிறன். நமது விவசாயி பார்த்தான், 3000 ரூபாய்க்கும்
வீட்டிலுள்ள அனைவருக்கும் புது ட்ரெஸ், பிரியாணி,பழங்கள் என்று வாங்கி
பணம் முழுவதும் காலி செய்துவிட்டு. ஒரு மாதம் கழித்து போலீஸ்
ஸ்டேஷனுக்கு போய் ஒரு புகார் கொடுத்தான் "பாங்கில் கடன் வாங்கி,
வங்கி அதிகாரிகளால் பார்வையிடப்பட்டு வெட்டப்பட்ட கிணறு காணாமல்
போய் விட்டது கண்டுபிடித்து கொடுக்கவும்". |