புதிய கவிதைகள்
| "பிளீஸ் பார்வர்ட்" | |
லைலா மஜ்னு காதலர்கள் பிரிக்கப்பட்ட தினம் இன்று, காதலின் மகிமையை உலகுக்கு உணர்த்த இந்த மின்னஞ்சலை குறைந்தபட்சம் 20 பேருக்கு, அடுத்த 15 நிமிடத்திற்குள்ளாக அனுப்பவும், தவறும்பட்சத்தில் உங்கள் காதல் தோல்வி அடையும். இது உறுதி”
என்று ஒரு குறும்பான மின்னஞ்சலை நான் ஆங்கிலத்தில் தயார் செய்துவிட்டு ஒரு 20 பேருக்கு அனுப்பி விழுந்து விழுந்து சிரிக்கலானேன்.
அடுத்த 30 நிமிடங்களுக்குள் அலுவலகமே பரபரப்பாய் அந்த மின்னஞ்சலை கண்ணும் கருத்துமாய் உலகத்தின் அனைத்து மூலைகளுக்கும் அனுப்பிக் கொண்டிருந்தது. மக்களுக்கு எத்தனை பயம்.. எல்லோருக்கும் தன் காதல் மேல் அவ்வளவு நம்பிக்கை.. ஹூம்,ஹூம்… இதுல அடுத்த வாரம் காதலர் தினம் வேற, நான் அனுப்பிய மெயில் எனக்கே 30 முறை வந்து சேர்ந்தது.. எல்லாவற்றையும் அழித்துவிட்டு என் வேலையை பார்க்கலானேன். அன்று மாலை, மெரீனா கடற்கரையில் நானும் ஜெனியும் “ஜெனி, என்ன முகம் டல்லா இருக்கு, என்ன விசேசம் ஊர்ல , டிரிப் எப்படி இருந்துச்சு” “கார்த்தி, ஐயம் ரியலி சாரி, எங்க வீட்டுல எனக்கு மாப்பிள்ளைப் பார்த்துட்டங்க, வேற வழியில்லை, இது அப்பாவுக்கு கவுரப்பிரச்சினை.. உன்னை விட எனக்கு எங்க வீடுதான் முக்கியம்,அடுத்த மாசம் திருநெல்வேலில கல்யாணம், லெட் அஸ் பி குட் ஃபிரெண்ட்ஸ்
|
|
| முன்பு | |