நீ வெளிச்சத்தில் சென்றால் உலகமே உன்னைப் பின்தொடரும். ஆனால் நீ இருட்டினில் சென்றால் உன் நிழல் கூட உன்னைப் பின்தொடராது. - ஹிட்லர்
அப்பத்தான் பயத்தில பசங்க கொடுத்திடுவாங்கன்னு
கொடுக்காத மாணவர்களை பக்கத்தில் அழைத்து, "உங்கப்பா யாருகிட்டயாவது பேசிகிட்டுருக்கும்போது அவரை தொந்தரவு பண்ணு..
அவர் அர்ணகயிறை பிடிச்சு தொங்குல அப்பத்தான் தருவாரு..."
என்று எரிச்சலில் கூறுவார். சுக மாணவனை தப்பிக்க வைப்பதற்கும் அவரை குஷிப்படுத்த வைப்பதற்கும் நாங்கள் பக்கத்தில் போய்
"அய்யா அவங்க அய்யா தண்ணி வண்டி...தினமும் தண்ணிய போட்டுட்டு வந்து அவங்க அம்மாவை அடி அடின்னு அடிப்பாரு..." ன்னு சொல்லுவோம். அதைக்கேட்டு உற்சாகமடைந்து விழியை ஒருக்களித்து நக்கலாக,
" அப்படியா! தண்ணி வண்டியா..அடிப்பாரோ ?"
என்று திரும்ப திரும்ப கேட்பார். கணவன் மனைவியைப் போட்டு அடிக்கும் நிகழ்வுகள் பற்றி யார் பேசினாலும் அவருக்கு உற்சாகத்தையே கொடுத்தது.
மாணவர்களை விடவும் மாணவிகள் பணம் தர தாமதமானால் அவ்வளவுதான்...
"உன்னலாம் எவன் கூப்பிட்டான் ஸ்கூலுக்கு.. வீட்டுல இருந்துக்கிட்டு சட்டி நிறைய சாயா போட்டு, ஊத்தி ஊத்தி குடும்பத்தோட குடிக்க வேண்டியதுதானேன்னு" உபசரிப்புகளை ஆரம்பித்து விடுவார்...
அவருக்கு ஏன் பெண்கள் மீது வெறுப்பு என்று எங்களால் புரிந்து கொள்ள முடியாமலையே இருந்தது.
அவர் மதிப்பெண்கள் போடுகின்ற விதம் இன்னமும் சிரிப்பாக இருக்கும். வரலாற்று தேர்வு என்றாலே மாணவர்கள் உற்சாகமடைந்து நிறைய நிறைய எழுத ஆரம்பித்துவிடுவாகள்.
15 மதிப்பெண்கள் 10 மதிப்பெண்கள் கேள்விகளுக்கு எல்லாம் மாணவர்கள் எழுதிய அளவினை, அளவுகோலால் அளந்துதான் மதிப்பெண் வழங்குவார்
கூர்ந்து வாசித்துப் பார்த்தால் அதில் வரலாறுகளின் இடை இடையே பக்கங்களை நிரப்புவதற்காக அந்த நேரத்தில் ஓடிய படத்தின் கதைகளை அளந்துவிட்டிருப்பர்கள்.
ஒரு தடவை அப்படித்தான் ஒரு மாணவன் இன்னொரு