" சாலை விபத்து மரணத்தில் இந்தியா முதலிடம் "

           உலகிலேயே சாலை விபத்துகளால் அதிக உயிரிழப்புகள்   நேரிடும்

நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. சீனாவை பின்னுக்கு தள்ளி,

இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளது.

           சாலை   விபத்துகளால்   உலகிலேயே, அதிகமான   உயிரிழப்புகளை

சந்திக்கும் நாடாக சீனா இருந்தது. தற்போது, சீனாவை பின்னுக்கு தள்ளி,

இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளது. சீனாவில், 2006ல் ஏற்பட்ட சாலை

விபத்துகளில், 89 ஆயிரத்து 455 பேர் உயிர்   இழந்துள்ளனர். இந்தியாவில்,

இதே ஆண்டில், சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை

ஒரு லட்சத்து ஐந்தாயிரத்து 749.கடந்த 2005ல், சீனாவில்   நிகழ்ந்த சாலை

விபத்துகளில், 98 ஆயிரத்து 738 பேர் பலியாகி இருந்தனர். இதே ஆண்டில்,

இந்தியாவில்     நிகழ்ந்த   சாலை     விபத்துகளில்,   95   ஆயிரம்      பேர்

உயிரிழந்தனர்.இந்த தகவலை, மத்திய சாலை போக்குவரத்து மற்றும்

நெடுஞ்சாலை துறை அமைச்சகம் கூறியுள்ளது.

Next...