இணைய வலங்கள்
இன்றைய உலகம்
அடுக்கடுக்காய் வைக்கும் அற்புதங்கள்
விரல்நுனியில் பல்வேறு விபரங்கள்
இரண்டு பக்கம் எதற்குமே
இருப்பது அறிவீரன்றோ
இணையம் ஒன்று இருப்பதனால் இளசுகள் கெடுக்கின்றார்
இவர்களுக்கு இது எதற்கு
இல்லாமை நன்றேன்பார் ஒரு சாரார் .
பிழையான விவாதம் இது
பிள்ளைகளைக் கெடுக்கவில்லை
பிரித்தறியப் பழகிவிட்டால்
பிரச்சனைகள் ஏதுமில்லை என்பார் மறுசாரார்
இன்னொரு உலகம் இது
இங்கு இல்லாத விடயம் ஏது
இருப்பதைக் கற்காத போது
இவர்கள் உயர்வது எப்போது ?
|